தடைப்பட்டிருந்த பல்கலைகழக கட்டுமானத் திட்டங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாட்டில் உள்ள சில முக்கிய பல்கலைக்கழகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானத் திட்டங்களை நிறைவுக்கு கொண்ட வர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மொரட்டுவ, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, சப்ரகமுவ, களனி மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களில் நிறுத்தப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் நிறைவுக்கு கொண்டு வரப்படவுள்ளன.
இடைநிறுத்தம்
கொவிட் - 19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களில் குடியிருப்பு வசதிகள், உணவகங்கள் மற்றும் பொது வசதிகள் ஆகியவை அடங்கும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைத்த முன்மொழிவை பரிசீலித்த அமைச்சரவை, நிலையான கொள்முதல் நடைமுறைகளின் கீழ் 2025ஆம் ஆண்டில் முக்கிய வசதிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.
இதன்படி, மேற்படி பல்கலைகளில் மீதமுள்ள பணிகள் நிறுவனத் தேவைகளின் அடிப்படையில் திருத்தங்களுடன் 2026 முதல் தொடரும் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
