ISIS உடன் அரசு கூட்டு - சாட்சியம் வழங்க தேரர் தயார்: ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை..! சட்டத்தரணி மனோஜ் பரபரப்பு தகவல்
தற்போதைய அரசு ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கைகளைக் கொண்ட சில முக்கிய குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது என்றும், அது தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தயாராக உள்ளார் என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
சிறையில் அடைக்கும் நடவடிக்கை
அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது ஓய்வு காலத்தில் மனைவியின் பராமரிப்பு மிகவும் அவசியமான ஒரு சந்தர்ப்பத்திலேயே, அரசு ஷிராந்தி ராஜபக்சவைச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவந்து சேவை செய்த ஒரு தலைவருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையையே இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது. திருமதி ஷிராந்தி ராஜபக்ச போலி நோயைக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனப் பொறுப்புள்ள ஊடகங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி, அவருக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு ஒரு மனிதனின் உயிரோடு விளையாடக் கூடாது. மருத்துவ அறிக்கைகளைச் சவாலுக்கு உட்படுத்துவது நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

ஞானசார தேரரை 'இனவாதி' என முத்திரை குத்த வேண்டாம்
அத்துடன், கலகொடஅத்தே ஞானசார தேரரை 'இனவாதி' என முத்திரை குத்த வேண்டாம். அவருக்கு இந்தத் தீவிரவாத ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கியதே பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள்தான். சிறையில் இருக்கும் ஞானசார தேரர், நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பு குறித்த கவலையையே வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய அரசு ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையுடைய குழுக்களுடன் இணைந்து செயற்படுகின்றது என்றும், நாட்டின் தேசிய பாதுகாப்போடு விளையாடுகின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தூதுவனைக் கொல்வதற்குப் பதிலாக அவர் கொண்டு வரும் செய்தியைக் கவனியுங்கள்.
ஞானசார தேரருக்கு எதிராக விரல் நீட்டுவதற்கு முன், அவர் கூறுவதில் உள்ள உண்மையைக் கண்டறியுங்கள். எனவே, சட்டபூர்வமான வழிமுறைகளின் கீழ் ஜனாதிபதி, ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam