மாற்றுக்கருத்துக்கு செவிசாய்க்காத கோட்டாபய அரசாங்கம்! விமோசனமடையுமா இலங்கை?
இலங்கையின் அரசியல், இன்று ஏனைய நாடுகளுக்கு வேடிக்கைக் காட்டும் அரசியலாக மாறிவிட்டது.
வரலாற்றில் முன்னர் இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை என்று அனைவருமே கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகிப்போயுள்ளது.
இலங்கைத்தீவில் ஆளும் கட்சி அரசியல், எதிர்க்கட்சி அரசியல், வெளிச்சக்திகளின் அரசியல் என்று மூன்று அரசியல் தளங்கள் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன.
இதில் மூன்றாவது அரசியலாகக் கருதப்படும், வெளிச்சக்தி அரசியலே இலங்கையில் இன்று ஆளும் கட்;சியையும், எதிர்க்கட்சியையும் ஆட்டிப்பார்க்கும் அரசியலாக வியாபித்துள்ளது.
இதனை குறிப்பிட்டு ஒரு வெளியகச் சக்தி என்பதற்குள் வரையறுக்கமுடியாது.
பல சக்திகள் ஒன்றிணைந்து, இலங்கையின் அரசியலில் ஈடுபாடு காட்டும் அளவுக்கு இலங்கையின் தளம் திறந்து விடப்பட்டுள்ளது.
முன்னா் இலங்கையைப் பொறுத்தவரை ஒரு நாட்டுக்கு சாா்பான நாடாக இருந்தது.
எனினும் இப்போது இலங்கை, எல்லா நாடுகளும் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு கடன்பட்டு கடமைப்பட்டிருக்கிறது.
உள்நாட்டுப் பிரச்சனையை உள்நாட்டிலேயே தீர்க்க வேண்டும் என்று பேசிய அரசியல்வாதிகள், உள்நாட்டு யுத்தத்தை எப்போது வெளிச்சக்திகளின் ஆதரவுடன் முடித்து வைத்தார்களோ அன்றே, வெளிநாடுகளுக்கு துணைபோவோராக மாறிவிட்டனர்.மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர். யுத்தத்தில் வெற்றிப்பெறச்செய்த நாடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இலங்கையில் மாறி மாறி வரும் அரசாங்கங்களுக்கு ஏற்பட்டு விட்டது.
இந்தியா, சீனா,அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்று இலங்கைக்குள் “ஆதிக்கச் செல்வாக்கு“ செலுத்தும் சக்திகளாக மாறியுள்ளன.
இந்த நாடுகளின் தாக்கங்களே, இன்று சுவரில் அடித்தப் பந்துகளைப் போன்று இலங்கையை பாதித்துக்கொண்டிருக்கின்றன.
69 லட்சம் வாக்குகளை வழங்கிய மக்கள், தமது தெரிவுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
69 லட்சத்துக்குள் அடங்காத எதிர்க்கட்சிக்கு வாக்களித்த மக்கள், 69 லட்சத்துக்கு சொந்தமான அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெகுவிரைவில் வீழ்ந்துவிடும் என்று எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்தநிலையில் பழிவாங்கும் அரசியலும், கட்சி அரசியலுக்கான விடயங்களுக்குமே இன்று முக்கித்துவம் வழங்கப்படுகிறது.
கொள்கை அரசியல் என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நாட்டின் அரசியல் சாகடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகத்தையே பாதித்தக் கொடிய நோயாகும். ஆனால் இலங்கையின் தற்போதைய அரசாங்க அரசியல் நிகழ்ச்சி நிரலில் கொரோனாவும் ஒரு காரண அரசியலாகச் சோ்க்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இலங்கையில், எதற்கு பற்றாக்குறை இல்லை என்பதைத் தேடவேண்டிய நிலை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் கோட்டாபய ஜனாதிபதி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
எனினும் அவா் நாட்டை நல்நிலைக்கு கொண்டு வருவாா் என்று சிங்கள மக்கள் வைத்திருந்த இனபற்றுடனான நம்பிக்கை தகா்ந்துப்போய்விட்டது.
தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மத்தியில் அவா் மீது இருந்த சந்தேகத்துடனான நம்பிக்கையும் தகா்ந்துப்போய்விட்டது.
பொதுமக்களின் இந்த தேடலுக்கு பதில் இல்லையென்றால், பொது மக்கள் மத்தியில் இருந்து பல்வேறு வெகுஜனப் போராட்டங்கள் விரைவில் வருவதை தவிர்க்கவே முடியாது போய்விடும்.
எனினும் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மற்றும் 20ஆவது அரசியலமைப்பின் அதீத அதிகாரங்கள் என்பன அவரையும் அவரின் அரசாங்கத்தையும் வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலைக்கு அவாின் ஆளுமையில் உள்ள குறைப்பாடு காரணம் இல்லை. மாறாக ஆளுமையை உாியமுறையில் பயன்படுத்தாமையே காரணமாகும்.
“தற்போது பொருளாதார நிலையை சீா்செய்ய சா்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு இலங்கையின் முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கையின் அமாிக்கத் துதுவர் போன்றோர் ஆலோசனை தொிவித்து வருகின்றனர்.
எனினும் அரசாங்கம் அழிந்தாலும், சா்வதேச நாணய நிதியத்திடம் சென்று இலங்கை மக்களை அழிக்கத் தயாரில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது”
இந்த நிலையில் இலங்கையை செழிப்புமிக்க நாடாக மாற்ற வேண்டுமானால், மாற்றுக்கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
அத்துடன் இலங்கை சிங்களவா்களின் நாடு என்ற மமதை (கருத்தியல்) அகற்றப்பட வேண்டும் என்பது யதாா்த்தமான கருத்தாக உள்ளது.
எனவே இது இரண்டும் நடக்கும் வரை இலங்கையின் அரசியல்வாதிகளால், இலங்கைக்கு விமோசனமில்லை.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




