"கோட்டாவுடன் நாங்கள்" பிரசாரத்தில் மேலும் அமைச்சர்கள் இணைவார்கள்?
“இப்போது நாம் ஒன்றாக நின்று இந்த பொருளாதார நெருக்கடியை ஒன்றாக எதிர்த்து போராடுகிறோம்”
கோட்டாவுடன் நாங்கள் இருக்கிறோம்” #WeAre With Gota”என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த ஆதரவு கருத்தை அடுத்து, சமூக தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதேநேரம் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்குள் உள்ளவர்கள் மற்றும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் பங்காளி கட்சியினரின் கருத்துக்களும் அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் பலர் ; #GoHomeGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் #WeAre With Gota உடன் ஜனாதிபதியை ஆதரிக்கும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில் "உலகம் கண்டிராத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொண்டுள்ளோம்".
அதன் விளைவுகளை இப்போது இலங்கை உணர்கிறது. "நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றாக இணைந்து போரை முடித்தோம்".
"நாங்கள் ஒன்றாக தடுப்பூசி போட்டு கெரோனாவுக்கு எதிராக போராடினோம்".
"இப்போது நாம் ஒன்றாக நின்று இந்த பொருளாதார நெருக்கடியை ஒன்றாக எதிர்த்து போராடுகிறோம்".
எனவே #WeAre With Gota என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.



