நான் தான் முடிவெடுப்பேன்! வேறு யாரும் தலையிட முடியாது: கோட்டாபய கொடுத்த பதிலடி
என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அரசியலில் கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளார் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்திருந்தன.
இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், என் மீள் அரசியல் பயணத்தைப் பற்றி நான் தான் முடிவெடுக்க முடியும். அதில் வேறு எவரும் தலையிட முடியாது.
நான் நாட்டை விட்டு ஓடவில்லை அரசியலுக்குப் பிரியாவிடை வழங்கவும் இல்லை. தற்போது ஓய்வில் தான் இருக்கின்றேன்.
நாட்டில் நடக்கும் விடயங்களை நாள்தோறும் அவதானித்து வருகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
