அமெரிக்காவில் கோட்டாபயவின் உரையால் அரசுக்குள் சலசலப்பு! வெளியான பகீர் தகவல்
அமெரிக்காவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆற்றப்பட்ட உரை காரணமாக அரசுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்( Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ச வர்தன் ஸ்ரீரிங்க்லாவுடனான சந்திப்பு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஈழத்தமிழர்களின்,தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய இலங்கை வருகை தந்தார்.இருப்பினும் அவர் வருகை தந்த முக்கிய காரணம் அதுவல்ல.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் எவ்வாறு காணப்படுகின்றது.அதனை எவ்வாறு சமாளிப்பது, சீனாவிற்கு சமனாக எமது இருப்பினை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது,இலங்கை அரசினை எவ்வாறு கைக்குள் வைத்துக்கொள்வது என்பது தொடர்பில் ஆராயவே இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சின்னத்திரை நாடான இலங்கையில் இந்திய கொள்கை,பெரிய நாடான இந்தியாவில் இலங்கை கொள்கை வெற்றிக்கொண்டுள்ளது.
மேலும்,இலங்கையின் தென் பகுதியில் சீனா கால் மேல் கால் போட்டு அமர்ந்துவிட்டது.இதன் காரணமாக இலங்கைக்குள் இந்தியா தோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
