ஈழத்தமிழர்களை காப்பாற்ற கோட்டாபயவின் புதிய வியூகம்! தடை விதிக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் (VIDEO)
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் அமைப்புக்களை ஒருபோதும் ஏமாற்றவில்லையெனவும், புலம்பெயர் அமைப்புக்களை தமிழ்த் தலைமைகளே தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றி வருவதாகவும் கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தலைமைகளால் கொண்டு வரப்பட்ட ஆட்சியில் தமிழ் மக்களுக்காக செய்ய முடியாதவற்றை ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடமாக சந்திக்க மறுப்பு தெரிவித்து வந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்களை வைத்து கொண்டு அபிவிருத்தி செய்வார் என நம்பிக்கையளித்து வருகின்றமையானது வாழ்க்கை பாடத்தில் யார் யாரை ஏமாற்றுவது என்ற கேள்வியெழுகின்றது.
அதாவது, கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் அமைப்புக்களை ஏமாற்றுகின்றாரா? அல்லது தமிழ்த் தலைமைகள் ஏமாற்றி வருகின்றனரா? என சந்தேகம் எழுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
தான் சிங்கள பெரும்பான்மை இனத்தினால் ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டவரெனவும்,தனது மக்களுக்காக தனது வாழ்க்கையை நிலை நிறுத்தக்கூடியவர் என்ற கருத்தை தெளிவாக கோட்டாபய ராஜபக்ச கூறி வருகின்றார்.
கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தமிழ் மக்கள் எதையும் பெற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் இல்லை.புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இல்லை.
ராஜபக்சவிடமிருந்து தமிழ் மக்களுக்கான எதனையும் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை இல்லையென 2018 ஆம் கூறிய நாங்கள் தற்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இணக்கப்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறிய விடயம் நம்பிக்கையின் அடிப்படையிலானது மட்டுமே.
அதாவது சட்டத்தரணிகளுக்கான பேச்சுவார்தையில் கூட தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதே 13 வருட கால அவலம்.
போர் சூழலற்ற 13 வருட காலங்களின் பின்னர் கடும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இலங்கை தீவினை விட்டு தப்பிச்சென்று அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைகின்றார்களெனின் அவை தமிழர் பகுதியில் கடை விதித்திருக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழ் மக்கள் முன்னிலையில் தோற்றுப்போயுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் விசேட கவனம்