கோட்டாபய எப்போது நாடு திரும்புவார் என்று எனக்கு தெரியாது: தினேஷ் குணவர்த்தன
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று தனக்கு தெரியாதென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, "கோட்டாபய ராஜபக்ச தனது சுயவிருப்பின் பிரகாரம் நாட்டை விட்டு வெளியேறி, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளார்.

நாடு திரும்பும் கோட்டாபய பற்றிய தகவல்கள்
தற்போது அவர் முன்னாள் ஜனாதிபதி. முன்னாள் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்கள் அவருக்கு உண்டு.

இந்த நிலையில், அவர் எப்போது நாடு திரும்புவார் என்று எனக்குத் தெரியாது. நாடு திரும்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும்.
அவர் நாட்டுக்கு வந்தால் அரசியலில் ஈடுபடுவரா? இல்லையா? என்பது தொடர்பில்
அவர்தான் தீர்மானம் எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.