அரசாங்கத்தின் விசாரணை இரகசிய பட்டியலில் சந்தேகநபராக முன்னாள் ஜனாதிபதி:வெளியான அறிக்கை-செய்திகளின் தொகுப்பு
1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஒரு சந்தேகநபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
குறித்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தின் அதிகம் அறியப்படாத மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அப்போது குறைந்தது 700 பேர் முக்கியமாக சிங்களவர்கள் அவரது கட்டளையின் கீழ் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது, ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி சம்பந்தப்பட்ட இரண்டாவது வன்முறைக் காலகட்டமாகும் என்றும் யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam