பொதுபல சேனாவை கோட்டாபய வளர்த்தெடுத்தாரா? பின்னணி என்ன?

srilanka colombo politics gotabaya
By S P Thas Mar 12, 2022 11:14 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பகுதிகள் குறைந்து போனமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ஷிரந்த அமரசிங்க, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இந்த கேள்வியை எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியும் முகமாக கர்தினால் மல்கம் ரஞ்சித், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய பின்னர் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பிலேயே இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கோடிட்டு அரச செய்தித்தாள் ஒன்று குறித்த பரிந்துரைகளில் ஒரு லட்சம் பகுதிகள் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் ஆணைக்குழுவின் சில பகுதிகள், ஜனாதிபதியினால் தக்கவைக்கப்பட்டு ஏனையவை நாடாளுமன்றுக்கு அனுப்பப்பட்டதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்திருந்தார்.

எனினும் நாடாளுமன்றத்துக்கு முழுமையான 67ஆயிரத்து 808 பக்கங்களே அனுப்பப்பட்டதாகவும், ஆணைக்குழுவின் அறிக்கையின் பகுதிகள் எதனையும் ஜனாதிபதி தக்கவைத்துக்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதியின் நீதித்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹனதீர குறிப்பிட்டுள்ளதாக ஷிரந்த அமரசிங்க தெரிவித்தார்.

மூன்று வருடங்களாக கோரியபோதும், வெளியிடாத இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள், ஜெனீவா மனித உரிமைகள் பேரவை வினவியபோது வெளியிடப்பட்டமையை, திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது என்று ஷிரந்த குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் வெளிநாட்டினால் திட்டமிட்ட தாக்குதல்கள் அல்ல. இலங்கையின் உள்ளவர்கள் இலங்கையர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இந்த தாக்குதலில் பெரும்பாலான தாக்குதல்கள் இலங்கையிலேயே திட்டமிடப்பட்டன. இந்த விடயம், பாதுகாப்பு ஆய்வாளர் ரொஹான் குணரத்னவுக்கு தெரியவில்லை என்றும் ஷிரந்த குறிப்பிட்டார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்பான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கடும் விமர்சனங்களை ஷிரந்த அமரசிங்க முன்வைத்தார். அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இருந்து நழுவிச்செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அவரும் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நிலந்த ஜயவர்தனவுமே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்தநிலையில் கர்தினால் சர்வதேசத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்றமை குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸ், 2016 ஆம் ஆண்டு முதல் இராணுவ புலனாய்வுப்பிரிவில் கடமையாற்றிய ஜமீல் எவ்வாறு தற்கொலை தாக்குதலில் இறந்தார் என்பதை சர்வதேசத்துக்கு தெளிவுப்படுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த விடயத்தில் ஜி.எல் பீரிஸூக்கு சவால் விடுப்பதாகவும் ஷிரந்த அமரசிங்க குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை கோட்டாபய மேற்கொள்ளவில்லை என்றால், ஏன் இந்த தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை அவர் முன்னெடுக்கவில்லை என்றும் ஷிரந்த கேள்வி எழுப்பினார். இனமுறுகலை ஏற்படுத்திய ஒருவரை ஒரே நாடு ஒரே சட்ட அமைப்புக்கு தலைவராக்கியதும், சஹ்ரானை ஊக்கப்படுத்திய அவர், தலைமையிலான பொதுபலசேனாவை வளர்த்தெடுத்தது கோட்டாபய ராஜபக்ச இல்லையா என்றும் ஷிரந்த கேள்வி எழுப்பினார்.

பொதுபலசேனாவை வளர்த்தெடுத்தது கோட்டாபய ராஜபக்ச என்பதை தற்போதைய அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவே அன்று தெரிவித்ததாகவும் ஷிரந்த அமரசிங்க சுட்டிக்காட்டினார். எனவே இது தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை அரசாங்கத்துக்காக ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சுதர்ஷினி் பெர்ணான்டோபுள்ளே மற்றும் நிமல் லங்ஸா போன்றவர்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர்கள் கத்தோலிக்க மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.

உண்மையான கத்தோலிக்கர்களாக இருந்தால் அவர்கள் தமது பதவிகளை விட்டு விலகவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கிடையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சேறு பூசும் வகையில் குற்றப்புலனாய்வு துறைக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் உண்மையை அமைச்சர் சரத் வீரசேகர வெளிப்படுத்தவேண்டும் என்று சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ஷிரந்த அமரசிங்க கோரிக்கை விடுத்தார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US