கோட்டாபயவின் அரசியல் மீள் பிரவேசம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு பிரவேசிப்பது நிராகரிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு எம்.பி.க்கள் குழுவொன்று முயற்சிப்பதாக அவருக்கு நெருக்கமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மீண்டும் அரசியலுக்கு வந்து தலை நிமிர்ந்து ஓய்வு எடுக்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்
எவ்வாறாயினும், அரசியலில் அவரது எதிர்காலம் குறித்து ராஜபக்சவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வெடித்த மக்கள் போராட்டத்தின் விளைவாக ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் நாடு திரும்பினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் ஏற்கனவே களம் தயாரித்து வருகின்றனர்.
கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்றுவாரா என்பதும், அவர் எந்த நிலையில் பணியாற்றுவார் என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan