தாய்லாந்து அரசாங்கத்திடம் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை
தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
கோட்டாபயவுக்கு தாய்லாந்து பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனை

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியில் செல்ல வேண்டாம் என அந்நாட்டு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், அவர் தாய்லாந்தில் உள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி கோரியுள்ளார்.
இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி முதலில் மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
தாய்லாந்து அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள்

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களுக்கு மேலாக தங்கியிருந்த அவர், அங்கிருந்து கடந்த வியாழக்கிழமை இரவு தாய்லாந்து சென்றார். தாய்லாந்தில் தங்கியிருக்க அவருக்கு மூன்று மாத காலத்திற்கான விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தாய்லாந்தில் இருக்கும் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் அந்நாட்டுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் நடந்துக்கொள்ளக் கூடாது எனவும் தாய்லாந்து அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது.
தாய்லாந்து இலங்கையை போன்ற தேரவாத பௌத்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்சவிற்கு தாய்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள தடை! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam