இறுதியாக மகிந்தவுக்கு அறிவித்த கோட்டாபய! நாட்டை விட்டு தப்பிச் செல்லும் முன்னர் நடந்தவற்றை பகிரங்கப்படுத்தும் மகிந்த
நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ச என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் முடிவு செய்துவிட்டு இறுதியில் நான் போகிறேன் என என்னிடம் கூறினார். நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை என்றும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை உறுதி: நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் |
இந்த நாட்டின் நிலைக்கு நானும் பொறுப்பு..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாத்திரம் நாட்டின் இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல, நானும் முந்தைய அரசாங்கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ச செய்ய வேண்டியதை முடித்திருக்க வேண்டும். நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் கூடாது.
சர்ச்சைக்குரிய சீன கப்பல்! இந்திய - இலங்கை உறவில் விரிசலா |
எனினும், அவர் முடிவு செய்துவிட்டே, நான் போகிறேன் என என்னிடம் கூறினார். நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை.
கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் மே மாதம் வரைநான் பிரதமராக இருந்தேன். போகலாமா என்று அவர் என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்கும் கோட்டாபய பொறுப்பல்ல. இதற்கு நான் மற்றும் முந்தைய அரசாங்கங்கள் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும்.
கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளான கோட்டாபய
துரதிஷ்டவசமாக, கோட்டாபய, அவர் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார். எனவே, அவரைக் குறை கூற முடியாது.
அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறந்த நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். ஜனாதிபதியாக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார்.
கோட்டாபயவின் வருகையின் பின்னணியிலுள்ள மர்மம் அம்பலம் |
முன்பெல்லாம் அவர் ஒரு கடும்போக்குவாதியாக இருந்தார். ஜனாதிபதியானவுடன் அவர் மென்மையாக மாறினார். ஆனால் அவர் அரசியல்வாதி அல்ல. எவ்வாறாயினும், அவர் முன் இருந்த பணியை சரியாக முடித்திருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அதன் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றதை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராட்டியுள்ளார் .
விரைவான பொருளாதார மீட்சியைக் கொண்டு வரக்கூடிய ஒரேயொரு திறமையான நபர் ரணில் மட்டுமே. அதனால்தான் நான் அவர் பதவி ஏற்றதை ஆமோதித்து அவருக்கு எனது ஆதரவை தெரிவித்தேன் எனவும் மகிந்த கூறினார்.
