சர்ச்சைக்குரிய சீன கப்பல்! இந்திய - இலங்கை உறவில் விரிசலா
இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கடற்படைக் கப்பல் வருகை தந்தமையானது, இலங்கையுடனான புதுடில்லியின் முடிவில்லாத இக்கட்டான நிலையை காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
இதன்மூலம் இந்தியா முன்னர் இலங்கையுடன் மேற்கொண்ட ராஜதந்திரத்தின் ஆபத்துக்களில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்பதையும் இது சுட்டிக்காட்டுவதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா ஏமாற்றப்பட்டது
சீனாவின் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் என்று அழைக்கப்படுவது இந்தியாவால் கூறப்படும் உளவுக் கப்பலாக இருக்கலாம். அப்படியிருந்தும், சீனக் கப்பலுக்கு எதிராக இலங்கைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை பயன்படாது என்பதை உறுதிப்படுத்துவதில் புதுடெல்லி தவறிவிட்டது.
இதன் காரணமாகவே முதலில் சீனாவை அதன் கப்பல் பயணத்தை தள்ளி வைக்கச் சொல்லவும் பின்னர் வியத்தகு யு-டர்ன் செய்யவும் அரசாங்கம் கட்டாயப்படுத்தியது.
இந்தநிலையில் ஆகஸ்ட் 16 அன்று கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு சென்றபோது இலங்கை வெட்கப்பட்டது, இந்தியா ஏமாற்றப்பட்டது. எனினும் சீனா கடைசியாக சிரித்தது.
இலங்கையின் வேதனைமிக்க பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்பு, புதுடெல்லியை கைவிட்டு விட்டதாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். எனினும் அவர்கள் தெற்காசியாவில் உள்ள சிறிய நாடுகள் இஸ்லாமாபாத் மற்றும் பீய்ஜிங்குடனான இந்தியாவின் முடிவில்லாத போர்களில் ஒரு பகுதியாக இருக்க தயாராக இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.
எது எவ்வாறாயினும் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு முதல் 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. அது திருப்பிச் செலுத்த முடியாத பெரும் சீனக் கடன்களால் சிக்கியுள்ளது .
எனவே இந்தியாவின் சார்பாக கொழும்பு சீனாவுக்கு எதிராக நிற்கும் என்று எதிர்பார்ப்பது தர்க்கத்தை மீறும் கருத்தாக இருக்கமுடியும்.
இந்தநிலையில் சீனாவோ அல்லது வேறு எந்த நாடும் - புதுடில்லியின் சிவப்புக் கோடுகளைத் தாண்டியதாக வரையறுக்கக்கூடிய நகர்வுகளை மேற்கொள்ளும் போது இந்தியா அமைதியாக இருக்க வேண்டும் என்று இது அர்த்தப்படாது.
ஆனால் எந்த ஒரு நாடும் இந்தியத் தீர்ப்பிற்கு அடிபணிவதை பார்க்கமுடியாது என்று இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. எனவே இலங்கைக்கான கோரிக்கை, இலங்கையர்கள் அவமானமாகவோ அவமானப்படுத்தப்பட்டதாகவோ உணராத வகையில் செய்யப்பட வேண்டும் என்று ஊடகம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்லர்..
1980 களில், இலங்கையில் தமிழ் பிரிவினைவாத பிரசாரம் தீவிரமடைந்தபோது இந்திய அரசாங்கம் மோதல் தொடர்பாக கொழும்பு என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று அடிக்கடி பகிரங்கமாக கூறிவந்தது.
இது, இலங்கையில் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய மோசமான எண்ணத்தை உருவாக்கியது. பெரும்பாலான மக்கள் இதை உயர் கை தந்திரமாக பார்க்கின்றனர். எனினும் அடுத்த தசாப்தத்தில் அதற்காக பாடம் கற்றுக் கொள்ளப்பட்டது.
இலங்கையர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்தியாவிற்கு எதிரான ஒரு போக்கு நாட்டில் நிலவுவதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன 1980 களில் தமிழ் போராளிகளுக்கு பயிற்சி ஆயுதம் மற்றும் அடைக்கலம் கொடுத்ததற்காக ஆதிக்க சிங்கள சமூகம் இந்தியா மீது ஆழ்ந்த அதிப்ருதியில் உள்ளது.
இலங்கையர்கள் சீனா மீது மோகம் கொண்டவர்கள் அல்லர். எனினும் பழங்காலத்திலிருந்தே இலங்கை சீனாவுடன் நீண்டகால நட்புறவை அனுபவித்து வந்துள்ளது என்பதையும் இந்தியர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா கனரக ஆயுதங்களை வழங்கத் தயாராக இல்லாத போது சீனா வழங்கிய உதவியை இராணுவத்தினர் உட்பட பல இலங்கையர்கள் நினைவுகூருகின்றனர்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கையின் வலுவான இடதுசாரிக் குழுவானது பல தசாப்தங்களாக 'இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கு' எதிராக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டுதான் ஜே.வி.பி தலைமை ஒருவேளை முதல் தடவையாக இந்தியாவுக்கு ஆதரவான அறிக்கைகளை பகிரங்கமாக வெளியிட்டதுடன் இந்திய நலன்களைப் புறக்கணிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளது.
இவை அனைத்திற்கும் மத்தியில்இ தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவுப் பிரிவைத் தவிர்த்து இந்தியாவுக்கு மிகவும் விசுவாசமாக குரல் கொடுத்து வருகிறது. இது மத்திய மலையகத்தில் உள்ள 'இந்திய தமிழர்கள்' மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
ஹம்பாந்தோட்டைக்கு சீனக் கடற்படைக் கப்பலின் வருகையின் போது சீனாவுக்காகப் பேசிய ஒரு சில சிங்களர்களுக்கு மாறாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் மட்டுமே இந்திய பாதுகாப்பு நலன்கள் மதிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் குரல் கொடுத்தார் என்று இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்கள் எப்போதும் இந்தியாவின் பக்கம்
பாரம்பரியமாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல தமிழ் வீடுகளில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுடனான போர் தொடங்கும் வரை ஆகஸ்ட் 15ஆம் திகதிகளில் இந்தியாவின் சுதந்திர தினம் இலங்கைத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது என்றும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்றத்தில், 'இந்தியாவைத் தூண்டாதீர்கள்... எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் தமிழர்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்பார்கள் என்று கூறினார்.
இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய தீவுகளில் சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதை அடுத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்தியாவுக்காக இப்படிப் பேசும் வேறு எந்தச் சமூகமும் அண்டை நாட்டில் இருக்கிறதா? என்று இந்திய ஊடகம் இந்திய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே புதுடில்லி, சீனக் கப்பல் அத்தியாயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கையர்களுடனான தொடர்புகளை வியத்தகு அளவில் அதிகரிப்பதற்குச் சார்பான நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட வேண்டும்.
புதுடில்லியைப் பற்றிய சந்தேகங்களைக் கொண்டிருப்பவர்களையும் அணுக வேண்டும். அதே நேரத்தில் பாரம்பரிய நண்பர்களை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இலங்கை 'ராமாயண சுற்றுலா சுற்றுகளை' ஊக்குவிக்கும் அதே வேளையில் தமிழ்நாட்டில் மத சுற்றுலாவை மேற்கொள்ள இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர்களை புதுடில்லி ஈர்க்க வேண்டும். இதற்கு விமானம் மூலம் மட்டுமல்ல அதிக இணைப்பும் இருக்க வேண்டும்.
இந்தியா இலங்கையில் மேற்கொண்டுள்ள திட்டங்களை உரிய நேரத்தில் முடித்து தங்களின் மூலோபாய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அளப்பரிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் செயற்படவில்லை.
மறுபுறம் அதன் ஆதாரங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு சீன உதவியைப் பெற்று புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் இயங்குகிறது.
போரின் போது அழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களில் முக்கியமானவற்றையாவது மீண்டும் கட்டுவதற்கு இந்தியாவும் உதவ வேண்டும்.
இந்திய அரசாங்கத்திற்கான ஆலோசனை
பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் நாட்டின் ஏனைய இடங்களில் உள்ள பௌத்த விகாரைகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரைகளுக்கு அல்ல. புத்த கயா மற்றும் இந்தியாவில் உள்ள பிற பௌத்த தலங்களுக்கு பௌத்த சுற்றுலாவை எளிதாக்குவதற்கு மேலும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மிக முக்கியமாகஇ இலங்கைக்கு உறுதியான பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் மற்றும் தனியார் துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இருக்க வேண்டும்.
பால் உற்பத்தி பொருட்களுக்கு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை பெருமளவில் சார்ந்திருப்பது கடுமையாக குறைக்கப்படும் வகையில் இலங்கை ஒரு 'வெள்ளை புரட்சியை' அடைய இந்தியா உதவ வேண்டும். அதேபோன்று விவசாயத்துறையில் இந்தியா தனது அனுபவங்களை இலங்கையுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மேற்குக் கரையோரத்தில் உள்ள சிலாபத்திலிருந்து கிழக்குக் கரையோரத்தில் அருகம் விரிகுடா வரையிலான அனைத்து வழிகளிலும் முழு இலங்கைக் கரையோரத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பகுதிகள் தமிழ்க் கிராம மக்களால் நிரம்பியுள்ளன.
பெரும்பாலானவர்கள் மீனவர்களுக்கு உதவ இந்தியா பகுத்தறிவுடன் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். சீன மேலாதிக்கத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு இலங்கையில் இருக்கும் நட்பை உறுதிப்படுத்தி புதிய நண்பர்களை அரவணைக்க வேண்டும் என்றும் இந்திய ஊடகம் இந்திய அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.