கோட்டாபயவின் சர்ச்சைக்குரிய சொத்து விவகாரத்தில் சிக்கிய அரசியல்வாதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராசபக்சவுக்கு சொந்தமான கட்டுமானம் தொடர்பில் கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசேக விக்ரமசிங்கவை(Ashoka Wickremesinghe) குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
மாணிக்க கங்கை அருகே ஒரு கட்டுமானத்திற்காக முறைசாரா ஒப்புதல் வழங்கியதன் காரணமாக அசேக விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
கேள்விக்குரிய சொத்து
கேள்விக்குரிய இந்த சொத்து கதிர்காமத்தில் உள்ள மாணிக்க கங்கைக்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்கீட்டு நிலத்தில் அமைந்துள்ளது.
இது 12 அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தையும் கொண்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையின் போது, கோட்டாபய அந்தச் சொத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதை மறுத்துள்ளார்.
அதே நேரத்தில் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |