அமைச்சரவை நியமனத்தில் மொட்டு கட்சிக்கு உரிய இடம் அவசியம்! சாகர வலியுறுத்து
புதிய அமைச்சரவை நியமனத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உரிய இடம்
அவசியமாகும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பெரும்பான்மை பலம்

அவர் மேலும் கூறுகையில்,"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு உரித்தான அமைச்சு பதவிகள் உரிய வகையில் கிடைக்கப்பெற வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்ட அதாவது பெரும்பான்மை பலம் கொண்ட ஒரே கட்சி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன. எனவே, இது குறித்து ஜனாதிபதி உரிய கவனம் செலுத்துவார் என்று நம்புகின்றேன்" என கூறியுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan