கோட்டாபய தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றுள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்துக்கு உட்பட அடுத்தகட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
அத்துடன் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச, சாகர காரியவசம் உட்பட 'மொட்டு' கட்சியின் பிரமுகர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan