கோட்டாபயவிற்கு மாலைதீவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாலைதீவு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில் மாலைதீவு அரசாங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவு அரசாங்கம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது துணைவியாருக்கு மாலைதீவில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்
மேலும்,கோட்டாபய ராஜபக்ச பயணித்த இலங்கை விமானப்படை விமானம் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இராஜதந்திர அனுமதியை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோட்டாபய விமான நிலையம் ஊடாக 14 ஜூலை 2022 அன்று சிங்கப்பூர் சென்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
