கோட்டாபய அரசு செய்த கொடூரங்கள்! நாடாளுமன்றத்தில் அம்பலம்(Video)
முன்பு இருந்த கோட்டாபய அரசாங்கம் இருட்டு அறையில் என்னைத் தள்ளி பல கொடுமைகளை செய்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அந்த அறையில், மின்சாரமும் இல்லை, பாயும் இல்லை, தலையணையும் இல்லை நுளம்பு மாத்திமே இருந்தது.
இத்தனை கொடூரங்களை கோட்டாபய அரசு எனக்குச் செய்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோட்டாபய அரசாங்கம், தமது அதிகார மமதையின் உச்சத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவே, அவரது கட்சி இந்தக் குறுகிய காலத்தில் சின்னாபின்னமாகி, சீரழிந்து பல கூறுகளாக பிரிந்துகிடக்கின்றது.
20ஆவது திருத்தம் இந்த நாட்டின் சாபக்கேடு
19 வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரம் போதாதென்று, இன்னும் அதிகாரத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், சர்வாதிகாரியாக செயற்பட வேண்டும் என்று விரும்பிய நிலையிலும் அது நடக்கவில்லை. 20ஆவது திருத்தம் இந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.
அதன் விளைவுதான் இந்த நாடு இரண்டு வருட காலத்துக்குள் பொருளாதாரத்தில் சீரழிந்து, சுமார் 82 சதவீதமான மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தற்பொழுது ஏற்பட்டிருக்கின்றது.
பல பில்லியன் டொலர் வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டிலே டொலர் இல்லை. எரிபொருள் இல்லை.
இதனால் வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே நடைபெறுகின்றது. மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் வசதி இல்லை.
விவசாயிகளும் மீனவர்களும் சீரழிந்துபோயுள்ளனர். ஜனாதிபதி எதேச்சாதிகாரமாக எடுத்த பிழையான விவசாயக் கொள்கையினால், நாட்டில் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது. இவ்வாறான கஷ்டங்களுக்கு எல்லாம் 20 வது திருத்தமே அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.
இவ்வாறானதொரு திருத்தத்தைக் கொண்டுவந்து, நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றவுமில்லை. வெளிநாட்டுக் கடனை அடைக்கவுமில்லை.
முறையான திட்டமிடலோ,
சரியான கொள்கையோ இல்லாத கோட்டாபயவின் அரசாங்கத்தினால், நாடு அதலபாதாளத்திற்கு
சென்றுவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.