கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார பதவி விலகியுள்ளார்.
சுகீஸ்வர பண்டார தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (20.02.2024) கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக சுகீஸ்வர பண்டார கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெளியான காரணம்
மேலும், தாய் நாட்டிற்கும், அங்கு வாழும் சகோதர மக்களுக்கும் சேவை செய்வதே தனது ஒரே நோக்கம் எனவும், புதிய நாட்டை உருவாக்குவதற்கான புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டை பெருமையுடன் மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய அணியுடன் இணைந்து செயற்பட தான் தயங்கப்போவதில்லை எனவும் அவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
