அதிசயத்தக்க பேரழிவாக கோட்டாபய பாகம் 2 உருவெடுக்கலாம்! மீண்டும் போராட்டத்தில் சிக்கப்போகும் இலங்கை
கோட்டாபயவுக்கு நடந்தது அநுரவுக்கு நடக்கும், நீங்கள் மறந்துவிட்டால், அதை நினைவில் கொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மாநாடொன்றில் நேற்று(03) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
“கோட்டாபய பாகம் 2ஆக ஜனாதிபதி அநுர மற்றும் NPP அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சமூகத்தில் அது பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. இளைஞர் சங்கங்களை அரசியல் மயப்படுத்துவதாக இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கெசினோ ஹோட்டல்
அன்று நாமல் ராஜபக்சவின் நில்பலகாய என்ற திட்டத்தை ஆரம்பித்து இளைஞர்களை அரசியல் மயப்படுத்துவதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி இன்று அதையே செய்கிறது.

தற்போதைய அரசாங்கம் 76 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் விதைத்து வந்த வெறுப்பை இன்றும் தொடர்கிறது. கெசினோவுக்கு எதிராக பெரும் போராட்டத்தை உருவாக்கிய அநுர இன்று ஜனாதிபதியாக கெசினோ ஹோட்டலை திறந்து வைக்கிறார்.
கேசினோ எமது கலாசாரத்தை அழிக்க வேண்டும் என்று கூறி அன்று அநுரகுமார மதத் தலைவர்களை இதற்கு எதிராகக் செயற்பட வைத்தவர்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி
அவர்களின் பொய்களை மக்கள் இன்று அறிந்து கொண்டுள்ளனர். புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தப் போவதாக மார் தட்டிய அரசாங்கம் இன்று அதை நடைமுறைக்கு கொண்டு வரவில்லையென்பது இளைஞர்களுக்குத் தெரியும்.

கோட்டாபயவுக்கு நடந்தது அநுரவுக்கு நடக்கும், நீங்கள் மறந்துவிட்டால், அதை நினைவில் கொள்ளுங்கள்.
துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் சொல்வதே அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியாகக் கருதப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam