புதிய சொகுசு மாளிகையில் கோட்டாபய - தொடரும் சர்ச்சை நிலை
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்டென்மோர் கிரசென்ட்டில் புதிய சொகுசு மாளிகை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பொதுவாக உத்தியோகபூர்வ நிலையில் உள்ள வெளிவிவகார அமைச்சருக்குச் சொந்தமானது என செய்தி வெளியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற அரச தலைவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் விலக்குகளை நிர்வகிக்கும் சட்டத்தின் படி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் அரச அனுசரணையுடன் கூடிய இல்லத்திற்கான உரிமை கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மக்கள் எழுச்சியின் பின்னர் கோட்டாபாய ராஜபக்ச தனது பதவிக்காலத்தின் இடையிலேயே பதவியை விட்டு விலகியதால், அவருக்கு அவ்வாறான வசதியை வழங்குவது தொடர்பில் சட்டத்தில் தெளிவாக இல்லை.
சொகுசு மாளிகை
கொழும்பு 7, ஸ்டென்மோர் கிரசென்ட்டில் அமைந்துள்ள குறித்த சொகுசு மாளிகையானது, தற்போதைய வெளிவிவகார அமைச்சருக்கு ஒதுக்கப்படுவது வழமையாகும். இந்த வீட்டை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விருப்பம் தெரிவித்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மறைந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதற்கு முன்னர் இந்த வீட்டில் வசித்து வந்தார்.
கோட்டாபாவிற்கு வழங்கப்படுவதற்கு முன்னர் குறித்த வீடு பாரியளவில் புனரமைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இயலாமையால் கோட்டாபய ராஜபக்ச கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்த உடனேயே அவருக்கு மலலசேகர மாவத்தையில் அரசாங்க இல்லம் ஒதுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
இறுதியாக கோட்டாபய ராஜபக்ச தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சத்தம் அதிகமாக உள்ளதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தனக்கென பாரிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்த போதிலும் தனது பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகளை முன்வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் பலத்த பாதுகாப்புடன் இருந்த மிரிஹான வீட்டிற்கு வந்த ராஜபச புதிய வீட்டைக் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த புதிய கோரிக்கை வந்ததையடுத்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அங்கு வசிக்கவில்லை எனவும் அதனை அவருக்கு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்டான்மோர் கிரசன்ட்டில் புதிய உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, அவ்வாறானதொன்று நடக்கவில்லை எனவும், வெளிவிவகார அமைச்சருக்கு எவருக்கும் குடியிருப்புகளை வழங்க அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
