கோட்டாபய ராஜபக்ச முப்படைத் தளபதிகளை சந்தித்துள்ளதாக தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருப்பதாகவும், இன்று காலை முப்படைத் தளபதிகளை சந்தித்ததாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூலை 9 போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் இருந்த ராஜபக்ச, நேற்று மீண்டும் தரையிறங்கி, முப்படைத் தளபதிகளை சந்தித்தார் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜினாமா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13ம் திகதி பதவியை துறப்பார் என்றும், இந்த வார இறுதியில் வெளிநாடு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுலை 9 போராட்டம்
கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை என்பவற்றை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து சர்வ கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரை உடனடியாக பதவிகளில் இருந்து விலகுமாறு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை எதிர்வரும் 13ஆம் திகதி துறப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.