கோட்டாபய ராஜபக்சவை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வாருங்கள் - ஜனாதிபதியிடம் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பவும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேட்டம்பே ராஜோபவனாராமதிக வணக்கத்திற்குரிய கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்த நாட்டில் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நாட்டுக்கு நேர்மையான சேவை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் இரட்டைக் குடியுரிமையையும் இழந்தார். 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், எந்தத் தவறும் செய்யாத அமைதியானவர்.
கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய சேவை அளவிட முடியாதது
ஒரு பௌத்த அரச தலைவர் என்ற வகையில், கோட்டாபய ராஜபக்ச தனது நிறைவேற்று அதிகாரத்தை எந்த ஒரு மக்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக சிந்தித்தார்.
மகா சங்கத்தினர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ச பொறுமையுடனும் கருணையுடனும் தனது அதிகாரத்தை விட்டு விலகியதை ஒரு உண்மையான பௌத்தத் தலைவரின் மாபெரும் விலகலாகவே பார்க்கிறோம்.
அவர் ஆற்றிய அளவிட முடியாத சேவையை நன்றியுடன் நினைவுகூருமாறும், அவர் பாதுகாத்த தாய்நாட்டிற்குத் திரும்புவதோடு, முன்னாள் ஜனாதிபதிகளுக்குத் தேவையான பாதுகாப்பையும் அனைத்து சலுகைகளையும் வழங்குமாறும்கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 3 மணி நேரம் முன்

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
