மீண்டும் இலங்கை வரும் கோட்டாபய ராஜபக்ச:வெளியான தகவல்- செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு திரும்பி வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
சவூதி சென்றதன் பின்னர் அங்கிருந்து நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்காவில் குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய அங்கு செல்வதை தவிர்த்து வருகிறார். அங்கு வாழும் அவரின் மகனின் பாதுகாப்பிற்காகவே அமெரிக்கா செல்வதற்கான திட்டத்தை முழுமையாக கைவிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கோட்டாபய அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,