கோட்டாபயவின் புத்தகத்தில் கமல் குணரத்ன துரோகி
அமைதியான மக்கள் போராட்டத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சதி என்ற ஆவண புத்தகத்தில் மற்றுமொரு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன துரோகி என மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சதி என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்த புத்தகத்தில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அனைத்து பாதுகாப்புப் படைத் தலைவர்களும் துரோகிகள் என்பதன் அடைப்படையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோட்டபாய புத்தகம்
எனினும் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலே துரோகி பெயரில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அதே பதவியில் அவர் இன்றும் பணியாற்றி வருகிறார்.
“பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இத்தகைய சூழ்நிலைகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்கான திட்டத்தை தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்த எந்த முறையும் பயன்படுத்தப்படவில்லை” என அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் கூட இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும் பதில் திட்டத்தை தயாரிப்பதில் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவின் பங்கு இவ்வாறு தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.