கோட்டாபய நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Rakesh Dec 22, 2022 05:45 PM GMT
Report

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியைத் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய பதிலில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த செயலணியை 2020ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்தார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடுமையான எதிர்ப்பு

அப்போதே இந்த நடவடிக்கைக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையான வாழும் கிழக்கு மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட அந்தச் செயலணியில், சிங்களவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டமையே, அந்த எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

கோட்டாபய நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் | Gotabaya Rajapaksa And Ranil Wickremesinghe Rti

இதையடுத்து, அந்தச் செயலணியில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் உறுப்பினர்களாகப் பின்னர் சேர்க்கப்பட்டனர்.

'தொல்பொருள் உள்ள இடங்கள்' எனத் தெரிவித்து, சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமையின் காரணமாக, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தேவையற்ற ஒன்றாகவே சிறுபான்மை மக்கள் கருதினர்.

கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில்

இந்தநிலையிலேயே கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி, மேற்படி செயலணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார் என்று தனது விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது என்று குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். 

கோட்டாபய நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் | Gotabaya Rajapaksa And Ranil Wickremesinghe Rti

இது தொடர்பில் அந்தச் செயலணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே. ஹேனாதீர அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ள நிலையில், அதற்கென வழங்கப்பட்ட கடமைகள் அனைத்தும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட 2289/43ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், குறித்த கடமைகள் மேற்படி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் செயற்பட்டு வந்தபோதும், ஜனாதிபதிக்கு எதுவித அறிக்கைகளையும் இந்தச் செயலணி சமர்ப்பிக்கவில்லை.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் செயற்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் எவருக்கும் சம்பளமோ, கொடுப்பனவுகளோ தம்மால் வழங்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

1. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன - செயலாளர் பாதுகாப்பு அமைச்சு (செயலணியின் தலைவர்)

2. எல்லாவல மேதானந்த நாயக்க தேரர்

3. பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர்

4. வென்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர் (அஸ்கிரிய பீடம்)

5. கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர் (பதிவாளர் - மல்வத்து பீடம்)

6. கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர் (பதிவாளர் - அஸ்கிரிய பீடம்)

7. கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் (நிருவாக உறுப்பினர் - மல்வத்து பீடம்)

8. பேராசிரியர் கபில குணவர்த்தன (செயலாளர் - புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு)

9. சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க (தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்)

10. கீர்த்தி கமகே (காணி ஆணையாளர் நாயகம்)

11. ஆரியரத்ன திசாநாயக்க தென்னகோன் (நில அளவையாளர் நாயகம்)

12. பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ (சிரேஷ்ட விரிவுரையாளர் - களனி பல்கலைக்கழகம்)

13. தேசபந்து தென்னக்கோன் - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

14. எச்.டி. அசிங்சலா செனவிரத்ன (காணி ஆணையாளர் - கிழக்கு மாகாணம்)

15. திலித் ஜயவீர – (தலைவர், தெரண ஊடக வலையமைப்பு)

16. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவகே

17. பத்திநாதன் (ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர்)

18. முபிசால் அபூபக்கர் (விரிவுரையாளர்)

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Ammerzoden, Netherlands

27 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fjellhamar, Norway

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, கிளிநொச்சி, அரியாலை, Toronto, Canada

26 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US