மீண்டும் சர்வதேசத்தில் பேசப்பட்ட கோட்டாபய ராஜபக்ச
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக நாட்டில் இருந்து தப்பிச்சென்ற கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் கடந்த வாரம் சர்வதேசத்தில் பேசப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
மக்களால் விரட்டப்பட்ட ஜனாதிபதி

இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் வார இறுதியில் அரசியல்வாதிகள் கூடிய கலந்துரையாடல்களிலும் இறுதியாக பேசப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளின் மில்லியன் கணக்கான மக்கள் பார்க்கும் ஏ.பி.சி தொலைக்காட்சியில் பல மில்லியன் பரிசை வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியிலேயே முன்னாள் ஜனாதிபதி குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்த போட்டி நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. அதில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட நாட்டின் ஜனாதிபதி ஒருவர் இந்திய பெருங்கடல் ஊடாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.
அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த நாடு எது என கேள்வி கேட்கப்பட்டது. போட்டியில் கலந்துக்கொண்டவர்களில் இரண்டு பேர் சரியாக பதிலளித்ததுடன் ஏனையோர் சரியான பதிலை வழங்கவில்லை.
நாட்டில் மக்கள் போராட்டம் உச்சமடைந்த நிலையில் நாட்டில் இருந்து தப்பியோடிய கோட்டாபய

இலங்கையில் நடைபெற்ற கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்சவினருக்கு எதிரான போராட்டம் உச்சமடைந்த நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகை உட்பட முக்கிய அரச வாசஸ்தலங்கள், செயலகங்களை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து கோட்டபாய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.
மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றதுடன் தாய்லாந்தில் சில வாரங்கள் தங்கியிருந்த பின்னர் அண்மையில் இலங்கை திரும்பினார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam