உக்ரைன், பஹ்ரெய்ன் மற்றும் நேபாள நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
உக்ரைன், பஹ்ரெய்ன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சந்திப்பு நடத்தியுள்ளார்.
க்ளாஷ்கோ காலநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கும், உக்ரைனுக்கும் இடையில் பொருளாதார ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொல்டோமியர் ஸெலன்ஸ்கீ (Volodymyr Zelensky) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
During a conversation with @GotabayaR in Glasgow, agreed to establish a bilateral intergovernmental economic commission between Ukraine and Sri Lanka. Discussed the development of cooperation in the field of tourism, student education and intensification of bilateral cooperation. pic.twitter.com/CEJd6uFhFz
— Володимир Зеленський (@ZelenskyyUa) November 2, 2021
இதேவேளை, பஹ்ரைனின் முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் அல் காலீபாவும் (alman bin Hamad Al Khalifa) ஜனாதிபதி கோட்டாபயவுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேபாள பிரதமர் ஷெயர் பகதுர் டியுபாவுடனும் ஜனாதிபதி சந்திப்பு நடத்தியுள்ளார்.
கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
