கோட்டாபயவின் அடுத்த பயணம் ஆரம்பம்! செல்லவுள்ள நாடு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

Gotabaya Rajapaksa Rajapaksa Family Singapore Thailand Sri Lanka Anti-Govt Protest
By Steephen Aug 10, 2022 07:28 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச தற்காலிகமாக தங்கியிருக்க தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி

கோட்டாபயவின் அடுத்த பயணம் ஆரம்பம்! செல்லவுள்ள நாடு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் | Gotabaya Going To Bangkok

இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச  குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து இரண்டு நாட்களில் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

ஆட்சிக்காலத்தின் பாதியில் பதவியில் இருந்து விலகிய முதல் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார். இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நாளைய தினம் தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்  செல்ல எண்ணியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்ல உள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக தகவல் எதனையும் வெளியிடவில்லை.

அதேவேளை இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் ரட்சேடா தன்னடிரிக்கிடம் (Ratchada Thanadirek) கேட்டுள்ளதுடன் அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

இலங்கையில் இருந்து சென்ற பின் இதுவரை பகிரங்கமாக வெளியில் தலைக்காட்டாத கோட்டாபய  

கோட்டாபயவின் அடுத்த பயணம் ஆரம்பம்! செல்லவுள்ள நாடு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் | Gotabaya Going To Bangkok

இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டாபய பகிரங்கமாக வெளியில் வரவில்லை என்பதுடன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித சிறப்புரிமைகளையும் வழங்கவில்லை என சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

பலமிக்க ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினரான கோட்டாபய ராஜபக்சவுக்கு தற்போது 73 வயது. அவர் இராணுவத்தில் பணியாற்றியதுடன் பாதுகாப்புச் செயலாளராகவும் பணியாற்றினார்.

அவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் நடந்த போர் குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டை கோட்டாபய ராஜபக்ச இதற்கு முன்னர் முற்றாக மறுத்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்திலும் ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டின் பொருளாதாரத்தை தவறான முறையில் கையாண்டதே 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என விமர்சகர்களும், போராட்டகாரர்களும் தெரிவிக்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்சவின் மூத்த சகோதரர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்ச நாட்டின்ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்தவர். அவரது மற்றைய சகோதரரான பசில் ராஜபக்ச இந்த ஆண்டின் ஆரம்பம் வரை நிதியமைச்சராக பதவி வகித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க என கூறியிருந்தார்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி வோல்ட் ஸ்ட்ரீட் ஊடகத்திற்கு போட்டியளித்த ரணில் விக்ரமசிங்க, “கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான காலம் இது என நான் நம்பவில்லை” எனக் கூறியிருந்தார்.

மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US