கோட்டாபயவிற்கு அரசியல் தெரியாது: வெல்கம பகிரங்கம்
கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் தெரியாது. அதனால் தான் பதுங்குகுழி ஊடாக ஓட வேண்டியேற்பட்டது என நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் பக்கம் தலை வைக்காதீர்

மேலும் தெரிவிக்கையில்,“மஹிந்த ராஜபக்ச நல்லவர். ஆனால், நாட்டை விடவும் அவருக்குக் குடும்பம் தான் முக்கியம். உரிய காலத்தில் அவர் ஓய்வு பெற்றிருந்தால் தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்காது.
கோட்டாபய தற்போது அவர் நாட்டுக்கு வந்துள்ளார். நல்லது, ஆனால் தயவு செய்து அரசியல் களத்துக்கு வந்துவிட வேண்டாம். பிரதமர் பதவி வழங்கலாம் என சிலர் ஏமாற்றலாம். அதனை நம்பிவிடக்கூடாது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல்

நாமும் நாடாளுமன்றத்தில் தான் உள்ளோம். சும்மா இருக்கமாட்டோம். மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதி ரணிலின் காலை வாருவார்கள்.
முன்னோக்கிப்
பயணிக்க இடமளிக்கமாட்டார்கள்.
எனவே, ஜனாதிபதி, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும்"என கூறியுள்ளார்.