இலங்கை வரும் கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்று தகவல் தெரிவித்திருந்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு வருகை தரவுள்ளமையினால் அவரின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டை பாதுகாக்கும் மக்கள் சுவர் அமைப்பு (ரட ரகின ஜன பவுர சங்விதானய) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இன்று கடிதம் ஒன்றை கையளித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு! கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு |
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்புவார் எனவும், அவரது வருகை இராஜதந்திர வழிகள் ஊடாக இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ வேலைகள் எதுவும் இருக்காது எனவும், இலங்கையின் பிரஜையான அவர் தேவைக்கேற்ப இந்த நாட்டுக்கு வருதை தரும் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.