உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நௌஃபர் மௌலவிக்கு 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமானால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 33,000 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட காணொளியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டு
தற்போதைய வழக்குத் தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 15 பேருக்கும், தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு புரிந்த குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் முடிவுக்கு வந்துவிடவில்லை எனவும், இத்தாக்குதலை வழிநடத்திய, திட்டமிட்ட மற்றும் இதன் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல் இன்னமும் வெளிவர வேண்டியுள்ளதாகவும் சுதத்த மேலும் வலியுறுத்தியுள்ளார்.
சுதத்த திலகசிறி ஆளும் கட்சிக்கு மிக ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக மொட்டு கட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!