நள்ளிரவில் நடந்த கோர விபத்து - சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில்..
திருகோணமலை - தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலாகாமம் - கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று(23.09.2026) இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வான், முள்ளியடி பகுதியில் எருமை மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சாரதி படுகாயம்
இதன்போது, வான் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த விபத்தில் சிக்கிய எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விபத்து இடம் பெற்ற பகுதியில் மக்களின் அதிக போக்குவரத்து மற்றும் குடியிருப்பு பகுதியாக காணப்படுகின்ற போதிலும், குறித்த வீதியில் போதிய வீதி மின் விளக்குகள் இன்மை காரணமாக தான் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri