கோட்டா கோ ஹோம் என்பது மக்களின் நிலைப்பாடு:ரணிலின் நிலைப்பாடு என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மக்கள் மத்தியில் நிலைப்பாடு உருவாகியுள்ளதால், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையில் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் வெளியிட்டிருந்தார்.
கோட்டா கோ ஹோம் என்ற போராட்ட கோஷத்துடனேயே பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தகவல் அனுப்பி இருந்தார்.
ரணில் விக்ரமசிங்க இந்த நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்றாரா என்பது எங்களுக்கு தெரியாது.
எனினும் முழு நாட்டு மக்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற போராட்ட கோஷத்துடன் இருக்கின்றனர் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று 6 முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலைமையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட விடயத்தில் சில சர்வதேச நாடுகளின் தொடர்புகளும் இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
