கோட்டாபய - பசில் உள்ளக மோதல் தீவிர நிலை அம்பலம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க, ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தாமல் புதிய தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பசிலின் நியமிப்புகளை இரத்து செய்த ஜனாதிபதி மீண்டும் தெஷார ஜயசிங்கவை நியமிக்குமாறு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்துராஜவெல மாபிம லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு ஜனாதிபதி நேற்று விஜயம் செய்த போது, தெஷார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்ததுடன், இது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக தெஷார ஜயசிங்கவை மீண்டும் நியமிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ரேணுகா பெரேராவின் நியமனக் கடிதம் இரத்துச் செய்யப்பட்டு, தெஷார ஜயசிங்கவை மீண்டும் நியமனம் செய்வதற்கான நியமனக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ராஜபக்ஃ சகோதரர்களுக்கு இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த சம்பவமும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் தலைவரால் ரணிலுக்கு ஏற்பட்ட தோல்வி! - காலம் கடந்து வெளியான தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
தொடர்புபட்ட செய்தி
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி - லிட்ரோ காஸ் நிறுவனத்தில் திடீர் மாற்றம்





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
