துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! தவறை ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம்
2023ல் துருக்கியை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தின் போது மக்களை எச்சரிக்க தவறியதாக கூகுள் நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
2023ல் துருக்கியை பயங்கரமான நிலநடுக்கமொன்று தாக்கியது, இதனால் 55,000 பேர்களுக்கும் அதிகமானோர் பலியாகியதுடன் 1 லட்சம் பேர் படுகாயமடைந்தனர்.
பயங்கர நிலநடுக்கம்
7.8 மற்றும் 7.5 என இருமுறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் கட்டடங்கள் தரைமட்டமாகின.
சம்பவத்தின் போது கூகிள் நிறுவனத்தின் AEA அமைப்பு செயல்பாட்டில் இருந்த போதிலும், முதல் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தீவிரத்தை முறையாக கணிக்கவில்லை என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கம் உருவானதன் மையப்பகுதியிலிருந்து 160 கி.மீ.க்குள் 10 மில்லியன் மக்கள் வரை வசித்திருந்தும், கூகிள் நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், வெறும் 469 எச்சரிக்கைகளை மட்டுமே தங்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சுமார் அரை மில்லியன் பயனர்களுக்கு விழிப்புடன் இருங்கள் என மட்டும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கூகுள் எச்சரிக்கை
கூகுளின் இந்த எச்சரிக்கை அமைப்பு துருக்கியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தொலைபேசிகளை கொண்ட எண்ட்ராய்டு சாதனங்களில் இயங்குகிறது.
தொலைபேசிகளில் உள்ள சென்சார்கள் மூலம் தரையின் அசைவுகளைக் கண்டறிந்து, வலுவான நிலநடுக்கம் வருவதற்கு முன்பு பயனர்களுக்கு விரைவாகத் தெரிவிக்கிறது. நிலநடுக்கத்தின் போது, கூகிளின் இந்த எச்சரிக்கை அமைப்பு, நிலநடுக்கத்தின் அளவு 4.5 முதல் 4.9 வரை இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது எனினும் 7.8 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
2023 பெப்ரவரி 6ஆம் திகதி விடியற்காலை 4.17 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கூகுள் அமைப்பு உடனடி நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுத்திருந்தால், தொலைபேசி சத்தம் கேட்டு விழித்துக்கொள்ளும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு விரைந்திருப்பார்கள்.
அதே நாளில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூகுள் அமைப்பு சுமார் 8,158 தொலைபேசிகளுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
