சரக்கு வரிச்சட்டத்தை இரத்துசெய்ய அமைச்சரவையில் தீர்மானம்
கடந்த 2020-2021ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 16 பில்லியன் ரூபாய்களை நட்டப்படுத்திய, சீனி ஊழலுக்கு மையமாக இருந்த 17 வருடகால வரிச்சட்டத்தை இரத்துசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி விசேட சரக்கு வரி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“சுங்க வரி, வற வரி, துறைமுகம்,விமான நிலைய மேம்பாட்டு வரி உட்பட குறிப்பிட்ட இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் பல கட்டணங்களுக்குப் பதிலாக இந்த சரக்கு வரி 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை
இதன்படி உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் பருப்பு போன்ற பெரிய அளவிலான இறக்குமதி பொருட்களுக்கு, உள்நாட்டில் விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்காக அப்போதைய நிதி அமைச்சகச் செயலர் பி.பி. ஜயசுந்த இந்த வரியை அறிமுகப்படுத்தினார்.
இதன்மூலம் குறித்த வரி உயர்த்தப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது, உள்நாட்டு விலைகளை மாற்றியமைக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தது.
உதாரணமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம் அல்லது பிற விவசாயப் பொருட்கள் உள்நாட்டில் போதுமானளவு கையிருப்பில் இருக்கும்போது, அந்த பொருட்களுக்கான இறக்குமதியின் மீதான சரக்கு வரி, இறக்குமதியைத் தடுக்கும் வகையில் உயர்த்தப்படுகிறது.
அதேநேரம் உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருக்கும் போது, வரியைக் குறைத்தால், உள்நாட்டில் அவை குறைந்த விலையில் விணியோகிக்கப்படது.
சரக்கு வரி
இந்தநிலையில் ஆரம்பத்தில் இந்த சரக்கு வரியானது, பயன்படுத்தப்பட்டாலும், அது பிற்காலத்தில் விலைக் கட்டுப்பாட்டுக் கருவியாக மாறியது.
வெங்காயம், பருப்பு, சீனி போன்றவற்றிலிருந்து சீஸ், கிவி பழம் உலர்ந்த மங்குஸ்தான் பொருட்கள் வரை இதன் பட்டியல் நீண்டது இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தால் இது பிரச்சினைக்குரிய வரியாக கருதப்பட்டது.
மேலும், 2020 ஒக்டோபர் மற்றும் 2021 பெப்ரவரிக்கு இடையில் வழக்கத்தை விட 1,222 சதவீதம் கூடுதல் சீனியை இறக்குமதி செய்துள்ளது.
எனினும், நுகர்வோருக்கு நன்மை எதுவும் கிடைக்கவில்லை .அதேநேரம் வரியை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவால் 15.951 பில்லியன் ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |