கனடா புலம்பெயர் மக்களின் குடியுரிமை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்- செய்திகளின் தொகுப்பு (Video)
கனடாவிற்கு புலம்பெயர்ந்து எவ்வித ஆவணங்களுமின்றி வாழ்ந்து வருபவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான திட்டமொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை சாத்தியமாக்கும் திட்டங்கள் குறித்து விசாரிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது, அதை சாத்தியமாக்க முடியுமா என்பது குறித்து கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைப்பு, நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் எய்டன் ஸ்ட்ரிக்லேண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,



