கனேடிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கனடாவின் மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு நேற்று(04) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வங்கி வட்டி வீதம் 4.25 வீதமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி வீத குறைப்பு
அண்மைய நாட்களாக தனது மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பொருட்களின் விலைகள் குறைவடைந்து வரும் நிலையில் இந்த வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்படுவதாக கனேடிய மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரண்டாம் காலாண்டு பகுதியில் இவ்வாறு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்தால் வட்டி வீதங்களை மேலும் குறைக்க முடியும் என மதிய வங்கி தெரிவித்துள்ளதோடு, கனடாவில் தற்பொழுது பணம் வீக்க வீதம் 2.5 வீதமாக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |