வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
இதன்படி, வெளிநாட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விசேட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு வாரங்களில் நடைமுறை
இந்தத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ரெிவித்துள்ளார்.
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஆதரவுடன் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் ஓய்வூதியத் திட்டத்துக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு 20,000 ரூபாவில் இருந்து 100,000 ரூபா வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
