பிரபலமான வெளிநாடு ஒன்றுக்கு இலகுவாக செல்ல இலங்கையர்களுக்கு வாய்ப்பு - வெளியான மகிழ்ச்சித் தகவல்
நியூஸிலாந்து விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு நியூஸிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நியூஸிலாந்திற்கு விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் 9 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா பெற எளிமையான நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தகுதி விலக்கு பட்டியல் 23 ஆம் திகதி முதல் மதிப்பீட்டு புதுப்பிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு வேலை விசா
ஒரு விண்ணப்பதாரரின் தகுதிகள் அவர்களின் கல்வி வழங்குநரால் குறிப்பிடப்பட்டால், திறன் புலம்பெயர்ந்தோர் வகை அல்லது சில சிறப்பு வேலை விசாக்களுக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு சர்வதேச தகுதி மதிப்பீடு தேவையில்லை.
திறன் புலம்பெயர்ந்தோர் வகைக்கான தகுதி மட்டத்தில் அவர்கள் பெறக்கூடிய புள்ளிகளையும் இது தீர்மானிக்கிறது.
இதற்கு தகுதி பெற்ற நாடுகள் இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, சிங்கப்பூர், தென் கொரியா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்தாகும்.

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
