இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்
2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு செயல்முறையை அநுர அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி, வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரதியமைச்சர் தெரிவித்தார்.
ஓய்வூதிய உயர்வு
இதற்கிடையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan