யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜேர்மனிக்கு மகிழ்ச்சியான செய்தி
நடைபெற்றுவரும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், இன்று இங்கிலாந்துடன் ஜேர்மனி மோத உள்ள நிலையில், ஜேர்மனி ஜெயிக்கும் என்று ஆருடம் கூறியுள்ளது யசோதா.
யசோதா ஒரு ஆசிய பெண் யானை. அது ஜேர்மனியின் Hamburg உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வருகிறது.
42 வயதான யசோதா, ஜேர்மனி பங்குபெறும் கால்பந்து போட்டிகள் விடயத்தில் மிகத்துல்லியமான முடிவுகளைக் கூறும்.
முதலில், பிரான்சிடம் தோற்கும் ஜேர்மனி, போர்ச்சுகல்லை வெல்லும் என சரியாக கணித்திருந்தது யசோதா.
பிறகு, ஆச்சரியப்படத்தக்க விதமாக, ஹங்கேரிக்கு எதிரான போட்டி ட்ரா ஆகும் என்றும் கணித்தது யசோதா.
இந்நிலையில், இன்று இரவு ஜேர்மனி இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஜேர்மனி இங்கிலாந்தை வெல்லும் என கணித்துள்ளது யசோதா.
இந்த செய்தியைக் கேட்டு ஜேர்மனி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு முன் நடந்தது போலவே இம்முறையும் யசோதாவின் ஆருடம் பலிக்குமா? பார்ப்போம்!





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
