விவசாயிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!
எதிர்வரும் சிறுபோகத்தின் போது வயல் நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
சிறு போகத்திற்கு அவசியமான உர விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(06) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக வயல்நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
விவசாய நடவடிக்கை
இதன்போது, சிறு போக நெற்பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், தடையின்றி விவசாயிகளுக்கு சிறு போக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
