விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஒரு ஹெக்டருக்கு ஒரு இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) அறிவித்துள்ளார்.
ஆறு வகையான பயிர்கள்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நெல், சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகிய ஆறு வகையான பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுககு இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த டிசம்பர் 02ஆம் திகதி வரையான மோசமான காலநிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
