அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி (Video)
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறிப்பாக கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள், அரச நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அரச சார்பு ஊழியர்களுக்கும் இக்கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுற்றுநிருபம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
