உயர்தரப் பரீட்சைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
உயர்தரப் பரீட்சைகளை எழுதி முடித்த மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று(24) முன்மொழிந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், நல்ல இசையைக் கேட்பதற்கும், கடற்கரைகளைப் பார்வையிடுவதற்கும், கலாசார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கு நடவடிக்கை
“இளைய தலைமுறையினர் அடுத்தகட்ட வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விடயத்தைப் பற்றி நான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன்,” என்று அவர் கூறினார்.

இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri