மதரஸாக்களை கட்டுப்படுத்த நல்லாட்சி அரசாஙகம் நடவடிக்கை எடுக்கவில்லை: ஜி.எல். பீரிஸ்
மதரஸாக்கள் எனப்படும் இஸ்லாமிய பாடசாலைகளில் கற்பிக்கப்படும் விடயங்களை கண்டுபிடிக்க நல்லாட்சி அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அத்துடன் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கிட்டத்தட்ட 2,000 மதரஸாக்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த மதரஸாக்களில் இஸ்லாமிய பாடங்களை கற்பிக்க கிட்டத்தட்ட 600 பேர் நாட்டிற்கு பயணம் செய்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது, அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, இவ்வாறானவர்களை ஒருபோதும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களில் கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகை தர யாராவது விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், அவர்களின் பின்னணி முழுமையாக தேடப்பட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் இந்த நடைமுறைகள் அனைத்தையும் இல்லாதொழித்துவிட்டது என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan