நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவன்: நீதிமன்ற வழங்கியுயள்ள உத்தரவு
அம்பாறை நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான பாடசாலை மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியின் பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த வருடம் டிசம்பர் 17ஆம் திகதியன்று மணி ஒன்றை களவு செய்ததன் குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிஸாரால் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
இதன் பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனே இவ்வாறு மர்மமான முறையில் மரணித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் சிறுவனின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்ததையடுத்து கல்முனையிலுள்ள ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
பிரேத பரிசோதனையின் பின்னர், அடிகாயங்கள் மற்றும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை (27) மீண்டும் கல்முனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு பாடசாலையின் மேற்பார்வையாளரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணத்தை அச்சிட முடியாது என அறிவித்த ரணில் : சிரமங்களுக்கு மத்தியில் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri